மயானத்துக்கு செல்லும் பாதை அடைப்பு; முதியவர் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்

மயானத்துக்கு செல்லும் பாதையை அடைத்ததால் முதியவர் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்

Update: 2021-12-21 16:35 GMT
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள கமலாபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 70) உடல் நலக்குறைவால் பலியானார். அவரது உடலை உறவினர்கள், பொதுமக்கள் மயானத்துக்கு எடுத்து சென்றபோது, பாதை அடைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதை அடைக்கப்பட்டிருந்ததை கண்டித்து சாமல்பட்டி-மத்தூர் சாலையில் முதியவர் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அடைப்பை அகற்றி முதியவர் உடலை கொண்டு செல்ல வழி ஏற்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்