அனைத்து ரேஷன் கடைகளிலும் நுகர்வோரின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் நுகர்வோரின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் என்று கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.

Update: 2021-12-21 16:34 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் நுகர்வோரின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் என்று கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
கண்காணிப்புக்குழு கூட்டம்
தர்மபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 3-ம் காலாண்டு கண்காணிப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். இதில் பொது வினியோக திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர்கள் சித்ராவிஜயன், முத்தையன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன், மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சிவனேசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தீர்வு காண வேண்டும்
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மாதம்தோறும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வட்ட அளவில் கண்காணிப்புக்குழு கூட்டங்களை நடத்த வேண்டும். உறுப்பினர்கள் மூலம் அனைத்து ரேஷன் கடைகளிலும் நுகர்வோரின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கு உரிய தீர்வு காண வேண்டும். மாதாந்திர கூட்ட நடவடிக்கை விவரங்களை மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் செய்திகள்