மோட்டார் சைக்கிள் பாய்ந்து கண்டக்டர் பலி
கம்பம் அருகே 18-ம் கால்வாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து அரசு பஸ் கண்டக்டர் பலியாகினார்.
கம்பம்:
கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 58). அரசு பஸ் கண்டக்டர். இவர் பணி முடிந்து நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கம்பம் புதுக்குளம் பகுதியில் உள்ள நண்பரை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கம்பம் அருகே 18-ம் கால்வாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது. இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.