தண்டவாளத்தில் விரிசல்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் விரிசல்

Update: 2021-12-21 15:57 GMT
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிலைய அதிகாரி அலுவலகம் எதிரே 1-வது நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. 

இதனை இன்று காலை 6.45 மணியளவில் பராமரிப்பு பணியில் இருந்த ஊழியர்கள் கண்டனர். 

உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ½ மணி நேரத்தில் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. 

 ரெயில் நிலையத்திலேயே விரிசல் கண்டுபிடிக்கபட்டதால் ரெயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இன்றி 2-வது, 3-வது நடைமேடைகளில் ரெயில்களை இயக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் அனைத்து ரெயில்களும் சென்றன.

மேலும் செய்திகள்