ஆரணி சாமுண்டீஸ்வரி- ராமலிங்கேஸ்வரர் சாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
ஆரணி சாமுண்டீஸ்வரி- ராமலிங்கேஸ்வரர் சாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பஜார் வீதியில் சாமுண்டீஸ்வரி- ராமலிங்கேஸ்வரர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று அதிகாலை சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் கோவில் கோபுரத்தில் இருந்து பழம், பிஸ்கெட், சாக்லெட், பணம் உள்ளிட்டவைகளை வழங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கான பரிகார ஸ்தலமாக அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.