திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக அலெக்சாண்டர் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு திருப்பூர் புஷ்பா பஸ் நிறுத்தம் அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள செல்போன் கடைக்காரர் அலெக்சாண்டரை செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த போலீஸ்காரர், செல்போன் கடைக்காரரை திட்டி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, போலீஸ்காரர் அலெக்சாண்டரை மாநகர ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். வடக்கு போலீசாரும் விசாரிக்கிறார்கள்.