சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 40 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-12-21 11:24 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா, புகையிலைப்பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரும், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 17 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 15 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 413 புகையிலை பாக்கெட்டுகள், 169 மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1,300 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்