காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செந்துறை:
செந்துறை அருகே உள்ள நத்தக்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார். பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் காதலர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பெண்ணின் உறவினர்கள் எண்ணி, அந்த வாலிபரிடம் டிராக்டர் டிரைவராக வேலை செய்த ராஜேஷ் என்பவரை வீடு புகுந்து தாக்கி கடத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் பெண்ணின் தாய்மாமாவான கொளஞ்சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.