காட்சி பொருளாக இருக்கும் சமுதாயக்கூடம்
காட்சி பொருளாக இருக்கும் சமுதாயக்கூடம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதி கோவிந்தநாட்டுச்சேரியை அடுத்த நாயக்கர் பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால், சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சமுதாயக்கூடம் காட்சி பொருளாகவே இருக்கிறது. எனவே, மேற்கண்ட பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள் நாயக்கர்பேட்டை
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த தென்சருக்கை பகுதியில் அம்மன்கோவில்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் குழாய்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும், குடிநீர் குழாயை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதில் இருந்து விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தென்சருக்கை.