கவர்னர் தமிழிசையுடன் நமச்சிவாயம் சந்திப்பு
தேசிய இளைஞர் தின விழா குறித்து கவர்னர் தமிழிசையுடன் நமச்சிவாயம் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி, டிச.
புதுச்சேரியில் தேசிய இளைஞர் தின விழா அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து 7,500-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 24-ந் தேதி மத்திய மந்திரி அனுராக் தாக்குர் புதுச்சேரி வர உள்ளார்.
வருகிற 12-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி புதுவைக்கு வந்து தேசிய இளைஞர் தின விழாவை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பா.ஜ.க. தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அமைச்சர் நமச்சிவாயம் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது தேசிய இளைஞர் தின விழா முன்னிட்டு புதுவையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தேசிய இளைஞர் தின விழா குறித்து கவர்னர் தமிழிசையுடன் நமச்சிவாயம் சந்தித்து பேசினார்.