பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆக்கி போட்டி

ராஜபாளையத்தில் பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2021-12-20 19:23 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு  வழங்கப்பட்டது. 
ஆக்கி போட்டி 
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் மதுரை காமராசர் பல்கலைக்கழக  மண்டல அளவிலான ஆக்கி மற்றும் பூப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருமங்கலம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளை கல்லூரி செயலர் சிங்கராஜ் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக மண்டல பூப்பந்து போட்டி இறுதிச்சுற்றுக்கு ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி முன்னேறியது. 
சான்றிதழ் 
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதலாம் பரிசையும், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி 2-வது பரிசையும் வென்றது. பல்கலைக்கழக மண்டல ஆக்கி போட்டி இறுதி சுற்றிற்கு அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியும் முன்னேறியது. முதலிடத்தை சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி மற்றும் இரண்டாம் இடத்தை ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும் வென்றது. 
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி துறை இயக்குனர் முத்துக்குமார் செய்திருந்தார். முடிவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பால்ஜீவசிங் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்