சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. நேற்று திருவாதிரை மற்றும் 18 சித்தர்கள் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 மணி முதல் 8 மணி வரை 1 மணி நேரம் மட்டுமே கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 7 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு அகஸ்தியர் உள்ளிட்ட 18 வகையான சித்தர்களுக்கு பால், பழம், பன்னீர், இளநீர், உள்பட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.