தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-12-20 17:57 GMT
மின்கம்பம் மாற்றப்பட்டது
மணிக்கட்டி பொட்டல் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சாலையில் பாயும் கழிவுநீர்
மார்த்தாண்டம் குருசடியில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வடிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்ேதாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                   -அய்யப்பதாஸ், கண்ணக்கோடு.
சாலையை சீரமைக்க வேண்டும்
கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் இருந்து ஆசாரிமார் தெரு, மறக்குடி தெரு செல்லும் சாலை உள்ளது. அலங்கார தரைகற்கள்  பதிக்கப்பட்ட இந்த சாலையில் செடிகள் வளர்ந்தும், குப்பைகளும் அகற்றப்படாமல் உள்ளது. தெருவிளக்கும் எரியவில்லை. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, தெருவிளக்கு அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                        -எம்.சுப்பையா, கன்னியாகுமரி.
மத்திய அரசின் மருந்தகம் தேவை
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி கன்னியாகுமரியில் மத்திய அரசின் மருந்தகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
                                    -கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
குரங்குகள் அட்டகாசம்
அருமனை மணலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக வந்து வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தூக்கிச் செல்கின்றன. விரட்டுபவர்களை கடிக்க வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். 
                                                           -அருண் பிரசாத், அருமனை.
மின்கம்பம் மாற்றப்படுமா?
தாழக்குடி அருகே பீமநகரில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மின் கம்பத்தின் அருகில் உள்ள ஓடையில் பொதுமக்கள் குளிப்பது வழக்கம். தற்போது மின்கம்பத்தின் நிலையை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                 -ஜெகன், பீமநகரி.
விபத்து அபாயம்
புலிப்பனத்தில் இருந்து ஆற்றூர் செல்லும் சாலையில் குட்டைக்காடு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து வீயன்னூர் செல்லும் குறுக்கு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து மின்கம்பத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாற்றியமைக்க வேண்டும்.
                                                       -என்.ஜோஸ்வா, குட்டைக்காடு.

மேலும் செய்திகள்