விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தர்ணாவில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-20 17:37 GMT
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தர்ணாவில் ஈடுபட்ட  6 பேரை போலீசார் கைது செய்தனர். 
ஆர்ப்பாட்டம் 
விடுதலை  சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கழிவறை மற்றும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முறைக்கேடு நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பேரூராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை நடைபயணம் செய்து போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. 
அதன்படி நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த திரண்டனர். அப்போது போலீசார் போராட்டம் நடத்த அனுமதியில்லை என கூறினர். 
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
6 பேர் கைது 
தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவபிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்