நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் வீழ்ச்சி 495 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் வீழ்ச்சி 495 காசுகளாக நிர்ணயம்

Update: 2021-12-20 17:01 GMT
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 495 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.99 ஆக அதிகரித்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்ததால் விற்பனை மந்தம் அடைந்ததாகவும், விற்பனையை அதிகரிக்க கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். பிற மண்டலங்களில் முட்டை விலை வீழ்ச்சி அடைந்திருப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்