மனைப்பிரிவு, கட்டிட அனுமதியை விரைவில் வழங்க ஒற்றைசாளர முறை
மனைப்பிரிவு, கட்டிட அனுமதியை விரைவில் வழங்க ஒற்றைசாளர முறை
கோவை
மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதியை விரைவில் வழங்க ஒற்றை சாளர முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
குறைதீர்ப்பு முகாம்
மனைப்பிரிவு, கட்டிட அனுமதி தொடர்பாக பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம் கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
வீட்டு வசதி வாரிய முதன் மை செயலாளர் ஹிதேஷ்குமார் மக்வானா, நகர்புற வளர்ச்சித்துறை இயக்குனர் சரவண வேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங் களிலும் ஊரக அமைப்பு பிரிவில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பொது மக்கள் தங்களின் மனுக்களில் அனைத்து ஆவணங்களையும் முறையாக இணைக்க வேண்டும். அப்போதுதான் தாமதம் ஏற்படாது.
உடனடி தீர்வு
மனுக்கள் மீது விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் தீர்வு காண வேண்டும். மனைப்பிரிவு, கட்டிடங்களுக்கான அனுமதி அளிப்பதில் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
வீட்டில் இருந்தே பொதுமக்கள் தங்களின் மனுக்களை சமர்ப்பிக்கும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த முகாமில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.