தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-12-20 16:39 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் சங்கர் முன்னிலை வகித்தார். போராட்ட குழு தலைவர் ரவி வரவேற்றார். செயலாளர் தர்மலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடன் வழங்க குறியீடு நிர்ணயித்து பணியாளர்களை கண்ணிய குறைவாக நடத்தக்கூடாது. மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட வேண்டும். அரசு ஆணைப்படி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்பு பேக்கிங் செய்து வழங்கிட வேண்டும். பணியாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் வருகிற 5-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சீனன், மாணிக்கம், பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போராட்ட குழு செயலாளர் கலைவாணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்