‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-20 16:28 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
திறந்தவெளி பாராக மாறிய ஆற்றங்கரை
ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமநாயக்கனூரில் ஆற்றங்கரையை சிலர் திறந்தவெளி மதுபாராக பயன்படுத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஆற்றங்கரையில் அமர்ந்து மது குடிப்பதால், பெண்கள் ஆற்றுக்கு செல்ல முடியவில்லை. எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி மதுப்பிரியர்களை தடுக்க வேண்டும். 
-பாண்டி, கண்டமநாயக்கனூர்.
குடிநீர் வினியோகம் பாதிப்பு 
பழனி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சி ராஜாபுரம் ரைஸ்மில் காலனியில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. இதனால் பொதுமக்கள் விலைக்கு குடிநீர் வாங்கும் நிலை ஏற்படுகிறது. இது சாதாரண மக்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே குடிநீரை சீராக வினியோகம் செய்ய வேண்டும். 
-விக்னேஷ், ராஜாபுரம்.
சேதம் அடைந்த சாலை 
உத்தமபாளையம் பைபாஸ் பஸ்நிறுத்தம் முதல் கோம்பை செல்லும் வழியில் உள்ள அம்மாபட்டி விலக்கு வரையுள்ள சாலை சேதம் அடைந்து விட்டது. மேலும் வாகனங்கள் செல்லும் போது தூசு பறக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ராஜேஷ்குமார், உத்தமபாளையம்.
பள்ளி மேற்கூரை சேதம் 
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில 9, 10-ம் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துவிட்டது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் வகுப்பறையில் இருக்கும் நிலை உள்ளது. எனவே மேற்கூரையை சரிசெய்ய வேண்டும். 
-கணேஷ், கன்னிவாடி.
நடுரோட்டில் மின்கம்பங்கள்
திண்டுக்கல்-தேனி சாலையில் பாறைப்பட்டி பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் சாலை ஓரம் நின்ற மின்கம்பங்கள் தற்போது நடுரோட்டுக்கு வந்து விட்டது. அதை அகற்றாமல் சாலையை அகலப்படுத்தி உள்ளனர். இதனால் இரவு நேரத்தில் விபத்துகள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். 
-கண்ணன், திண்டுக்கல்.

மேலும் செய்திகள்