கரும்புகள் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

கரும்புகள் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் படுகாயமடைந்தார்.

Update: 2021-12-20 08:34 GMT
மங்களமேடு:
அரியலூர் மாவட்டம் ஓலையூரில் இருந்து கரும்பு ஏற்றப்பட்ட டிராக்டர் ஒன்று, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா உடும்பியத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த டிராக்டரை அரியலூர் மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஓலையூரை சேர்ந்த ரவிச்சந்திரன்(வயது 50) ஓட்டினார். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டர் டிரைவர் ரவிச்சந்திரன் பலத்த காயம் அடைந்தார். மேலும் சாலையில் கரும்புகள் விழுந்து கிடந்தன. இதையடுத்து ரவிச்சந்திரன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.  இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து வந்து சாலையின் நடுவே கிடந்த கரும்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து மங்களமேடு போலீசர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்