புதுச்சேரியில் கொரோனாவுக்கு இதுவரை 1,880 பேர் பலி

புதுச்சேரியில் கொரோனாவுக்கு இதுவரை 1880 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2021-12-19 20:23 GMT
புதுச்சேரி, டிச.20-
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,654 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 6 பேருக்கு தொற்று உறுதியானது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெட்டியார்பாளையம் உழவர்கரை 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,880 ஆக உயர்ந்துள்ளது. நேற்று  25 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று  பரவல் 0.36  சதவீதமாகவும், குண மடைவது 98.43 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 574 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 308 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 13 லட்சத்து 43 ஆயிரத்து 579 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்