தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
நாய்கள் தொல்லை
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை பகுதி உள்ளது. இந்த பகுதியின் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஆடுதுறை பகுதியில் நாய்கள் அதிக அளவில் சாலைகளில் சுற்றி திரிகின்றது. மேலும் சாலையின் குறுக்கே செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆடுதுறை பகுதியில் சுற்றிதிரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ராஜா, ஆடுதுறை.