வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-12-19 19:18 GMT
நெல்லை:
வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி
பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள பால்கணபதியாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் ஒரு புண் ஏற்பட்டது. அதன் வலி தாங்க முடியாமல் அவர் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் முத்துப்பாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் குருசாமி (25). இவர் நெல்லை அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் குருசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பூதப்பாண்டியன் (49). விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ேமல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பூதப்பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்