பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

விருதுநகரில் பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.

Update: 2021-12-19 19:08 GMT
விருதுநகர், 
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அதற்கான ஆயத்த மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. தொ.மு.ச. மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டினை தொ.மு.ச. மாவட்ட துணைத் தலைவர் அண்ணாதுரை தொடங்கிவைத்தார். 
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த சமுத்திரம், தொ.மு.ச. மண்டல துணைத்தலைவர் ராஜ செல்வம், ஐ.என்.டி.யூ.சி. மதுசூதனன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மூக்கையா, சக்திவேல், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். 
இம்மாநாட்டில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்