பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்,
கரூர் பசுபதிபாளையம் ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்திற்கு கீழ் பகுதியில் வைத்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நிர்மல்குமார் (வயது 24), பிரபு (33), ராஜா (38), ஷேக் தாவூத் (40), சதீஷ் (24), கோபால் (25) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.