அரவக்குறிச்சி பகுதியில் செழித்து வளர்ந்த மக்காச்சோளம்

அரவக்குறிச்சி பகுதியில் மக்காச்சோளம் செழித்து வளர்ந்துள்ளது.

Update: 2021-12-19 18:24 GMT
கரூர்
 அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி பகுதியில் ஆங்காங்கே மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையினால் தற்போது மக்காச்சோளப் பயிர் நன்கு செழித்து வளர்ந்து பசுமை நிறைந்து காணப்படுகிறது. மக்காச் சோளம் பயிரிட்டால் 5 மாதத்தில் மகசூல் தரும். ஒரு ஏக்கர் மக்காச்சோளம் பயிரிட்டால் 15 மூட்டை மக்காச்சோளம் மகசூல் கிடைக்கும். அதாவது 1500 கிலோ மக்காச்சோள விதை கிடைக்கும். 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1000 முதல் ரூ.1500 வரை விலை போகும். 
மக்காச்சோள விதைகளை வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் வந்து வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகள் விரும்பினால் வெளிச் சந்தைகளில் தாங்களாகவே கொண்டுசென்று விற்றுக் கொள்ளலாம். தற்போது அதிக அளவு மழை பெய்துள்ளதால் மக்காச்சோளம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்