கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.

Update: 2021-12-19 18:22 GMT
கரூர்
தரகம்பட்டி
கடவூர் வட்டம் பாலவிடுதி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் பாலமுத்து மனைவி பார்வதி (வயது 75). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற பார்வதியை காணவில்லை. இதையடுத்து பார்வதியின் மகன் நாகராஜ் தனது தாயை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் முள்ளிப்பாடியை சேர்ந்த பெருமாள் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு மூதாட்டியின் உடல் மிதப்பதாக தகவல் வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.             விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்து மாயமான பார்வதி என்பதும் அவரது மகன் நாகராஜ் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் பார்வதி கிணற்றில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்