வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி

Update: 2021-12-19 17:08 GMT
வேலூர்

வேலூரில் கடந்த மாதம் பெய்த தொடர்மழை காரணமாக கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் குளம் போன்று தேங்கிய தண்ணீர் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. சுமார் 12 நாட்களுக்கு பின்னர் கடந்த 11-ந் தேதி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் மீண்டும் கோவில் வளாகத்தில் ஊற்று வழியாக தண்ணீர் வந்து தேங்கி நின்றது. அதனால் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல மீண்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. கோவில் வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீர் 4 மின்மோட்டார்கள் மூலம் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று காலை பெரும்பாலான தண்ணீர் வற்றி விட்டது. அதனால் பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் வளாகத்தை பக்தியுடன் சுற்றி வந்தனர். கோவிலில் இன்று (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதையொட்டி காலை 5 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் காலை 6 முதல் 6.30 மணி வரை கோபுர தரிசனமும், அதன்பின்னர் சாமி உலாவும் நடைபெறும். மேலும் கோவில் வளாகத்தில் தேங்கும் தண்ணீர் மின்மோட்டார் மூலம் தொடர்ந்து வெளியேற்றப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்