அணைக்கட்டு
அணைக்கட்டை அடுத்த தேவிசெட்டிகுப்பம் அருகே உள்ள ஆண்டிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சீனு (வயது 50), தொழிலாளி. இவரின் வீட்டின் அருகே அதே பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகிறார். அவரது வீட்டின் சுவர் ஒரத்தில் விறகுகளை போட்டு வைத்துள்ளார். அந்த விறகுகளை எடுப்பதற்காக நேற்று காலை சீனு வந்தார். விறகுகளை எடுத்துக் கொண்டு இருக்கும்போது ஹாலோ பிரிக்ஸ் கல்லால் கட்டப்பட்டு இருந்த சுவர் இடிந்து சீனு மீது விழுந்ததில் அவருக்கு தலை மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.
அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனு இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.