வாலாஜாவில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2021-12-19 17:07 GMT
வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் பேரில், வாலாஜாபேட்டை போலீஸ் நிலையம்சார்பில் சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாபேட்டை மங்களாம்மாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. சப்- இன்ஸ்பெக்டர்கள் சித்ரா, பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் புகார் தெரிவிக்க மாணவர்களுக்கு சைல்டு லைன் அவசர போன் நம்பரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வாலாஜா இன்ஸ்பெக்டர் ஆகியோர்களின் செல்போன் நம்பர் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்