ஆலங்காயம் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது
ஆலங்காயம் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானங்களை சில நபர்கள் கூடுதல் விலைக்கு விற்று வருவதாக ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், நேற்று ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் பெத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்,
அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 40) என்பதும், அவர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், படகுப்பம் பகுதியில் மது விற்ற, அரசு (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.