எலச்சிபாளையம் அருகே கோவிலில் திருடிய கொத்தனார் உள்பட 2 பேர் கைது
எலச்சிபாளையம் அருகே கோவிலில் திருடிய கொத்தனார் உள்பட 2 பேர் கைது
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் இலுப்புலி மேட்டுக்காடு எல்லை கருப்பணார் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவில் உண்டியலை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் கோவிலில் சென்று பார்த்தபோது 2 பேர் உண்டியலை உடைக்க முயன்றனர்.
அந்த சமயம் தப்பியோட முயன்ற அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் (வயது 31), கார்த்தி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து உண்டியலில் திருடப்பட்ட ரூ.1,000 பறிமுதல் செய்தனர்.