நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Update: 2021-12-19 16:39 GMT
நாமக்கல், டிச.20-
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 மோகனூர், சேந்தமங்கலம்
வளையப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதேபோல் சேந்தமங்கலம் துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு, கந்தம்பாளையம்
திருச்செங்கோடு துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்செங்கோடு நகராட்சி பகுதி முழுவதும், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம் பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை, கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம் வரை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு செயற்பொறியாளர் பானுமதி தெரிவித்துள்ளார்.
நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல் கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகு கிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் ெசய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்