ராயக்கோட்டை அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற யானைகள்

ராயக்கோட்டை அருகே ரெயில்வே தண்டவாளத்தை யானைகள் கடந்து சென்றன.

Update: 2021-12-19 16:19 GMT
ராயக்கோட்டை:
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் ராகி பயிர் அறுவடையை குறிவைத்து யானைகள் வந்துள்ளன. அவை ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம், சானமாவு உள்பட பல வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்தநிலையில் ஊடேதுர்க்கம் காட்டில் முகாமிட்டுள்ள 25-க்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் நேற்று மாலை நாகமங்கலம், கொத்தப்பள்ளி பகுதிகளுக்கு சென்றன. அவற்றை ராயக்கோட்டை வனச்சரகர் நாகராஜ் மற்றும் வன ஊழியர்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டினர். இதனால் யானைகள் ஓசூர்-ராயக்கோட்டை ரெயில்வே பாதையை கடந்தன. அப்போது மேட்டில் ஏற முடியாமல் தவித்த 2 மாத குட்டியை, தாய் யானை துதிக்கையால் தள்ளி மேட்டில் ஏற்றியது. இதையடுத்து யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.

மேலும் செய்திகள்