திண்டுக்கல்லில் இடிந்து விழும் அபாயத்தில் அரசு பள்ளி கட்டிடங்கள் அகற்றுவதில் தாமதம்
திண்டுக்கல்லில், இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை அகற்றுவதில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
நெல்லையில், சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அரசு, தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றும் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை எந்த கட்டிடங்களும் இடிக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து கணக்கெடுத்துள்ளன. ஆனால் இதுவரை அந்த கட்டிடங்களை இடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்துவது புரியாத புதிராக உள்ளது.
இடியும் நிலையில் சுற்றுச்சுவர்
திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளிலேயே உடனடியாக அகற்றப்பட வேண்டிய கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளியில் சத்துணவு கூடம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தின் சுவரில் நீண்ட விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. சத்துணவு வாங்குவதற்காக சமையல் கூடம் பகுதிக்கு மாணவர்கள் செல்லும் போது அந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும்.
அதேபோல் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து செங்கல்கள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவர் இதுவரை அகற்றப்படவில்லை. மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.