சங்கராபுரம் தனியார் பள்ளியில் 4500 பிளாஸ்டிக் பாட்டில்களால் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்
சங்கராபுரம் தனியார் பள்ளியில் 4500 பிளாஸ்டிக் பாட்டில்களால் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்
சங்கராபுரம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சங்கராபுரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பாட்டில்களால் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் 4,500 பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி 25 அடி உயரம் உள்ள கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைத்தனர். இரவு நேரத்தில் மின்விளக்குளால் ஜொலித்த பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரம் காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் காணப்பட்டது. இதை வடிவமைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சந்திரசேகரன் பாராட்டினார். இதில் பள்ளி நிர்வாகிகள், முதல்வர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.