திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு

திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.

Update: 2021-12-19 16:08 GMT
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள வாழைக்காய்பட்டி ஜே.பி.நகரை சேர்ந்தவர் கலீல்அகமது. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் மோட்டார் அறைக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின் அங்கு பதுங்கியிருந்த சுமார் 7 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்