நஞ்சப்பசத்திரம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம்

நஞ்சப்பசத்திரம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம்

Update: 2021-12-19 15:02 GMT
குன்னூர்

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஒரு காட்டு யானை நடமாடி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கிருந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

 இருந்தபோதிலும் அது வனப்பகுதிக்குள் செல்லவில்லை. தொடர்ந்து அங்கு முகாமிட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த யானை நஞ்சப்பசத்திரம்  மேல் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்கள், கே.என்.ஆர். பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உலா வந்தது. 

இதனால் தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொழிலாளர்கள் தோட்டங் களுக்கு செல்ல அச்சமடைந்து உள்ளனர்.  

எனவே வனத்துறையினர் அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்