செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 46 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 646 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2545- ஆக உயர்ந்துள்ளது. 552 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 931- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர். 194 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.