நன்னடத்தை பிணையை மீறிய கள்ளச்சாராய வியாபாரிக்கு 271 நாட்கள் சிறை

நன்னடத்தை பிணையை மீறிய கள்ளச்சாராய வியாபாரிக்கு 271 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

Update: 2021-12-19 14:07 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியதிற்கிணங்க வாலாஜாபாத் மற்றும் காஞ்சீபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்களில் பல்வேறு கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சீபுரம், வெங்குடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (52) ஓராண்டுக்கு நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக 13.9.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கணேசன் 9.12.2021 அன்று வெங்குடி கிராம சுடுகாடு அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தது சம்பந்தமாக காஞ்சீபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டு காவலில் அடைக்கப்பட்டார். இவர் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 271 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்