ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று அதிகாலை நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளை பார்த்து டிரைவர் மினிலாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதன்பின்னர் மினிலாரியை சோதனை செய்ததில் 10 டன் ரேஷன் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து மினிலாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.