பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வயல் வரப்புகளில் உளுந்து பயிர் சாகுபடி செய்யலாம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வயல் வரப்புகளில் உளுந்து பயிர் சாகுபடி செய்யலாம் என நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாருமதி கூறினார்.
நீடாமங்கலம்:-
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வயல் வரப்புகளில் உளுந்து பயிர் சாகுபடி செய்யலாம் என நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாருமதி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உளுந்து சாகுபடி
அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். வரப்பு உளுந்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் வரப்பில் களைகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் வயலில் உள்ள வரப்புகளில் சாகுபடி செய்ய 3 கிலோ உளுந்து விதை போதுமானதாகும்.
உளுந்து விதைகளை உயிர் உரத்துடன் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி பின் வயல் வரப்புகளில் பயிர் செய்தால் பயிர் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். இவ்வாறு வரப்புகளில் உளுந்து பயிர் சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்து தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.
கூடுதல் மகசூல்
மேலும் பூச்சி தாக்குதலின் அளவு குறைகிறது. நீடாமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் வயல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.