கோட்டூர் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு வீணாகும் குடிநீர்

கோட்டூர் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது.

Update: 2021-12-19 12:52 GMT
கோட்டூர்:-

கோட்டூர் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. 

கூட்டு குடிநீர் திட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஆதிச்சபுரம் பாலம் அருகே செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. கோட்டூர், திருப்பத்தூர், எடையூர், சங்கேந்தி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்த குழாய் மூலம் தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாத காலமாகியும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

தடுக்க வேண்டும்

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் செய்திகள்