ஏரியில் கூலி தொழிலாளி பிணம்

திருவண்ணாமலை அருகே ஏரியில் கூலி ெதாழிலாளி பிணமாக கிடந்தார்.

Update: 2021-12-19 12:01 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே ஏரியில் கூலி ெதாழிலாளி பிணமாக கிடந்தார். 

திருவண்ணாமலை அருகே உள்ள கிளியாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட குண்ணுமுறிஞ்சி இரட்டை ஏரியில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது.

 இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

 முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் களஸ்தம்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி காமராஜ் (வயது 50) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை ஏரிக்கரையிடம் சிலர் பார்த்ததாகவும், குடிபோதையில் தவறி ஏரியில் விழுந்து இறந்து இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. 

பின்னர் போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்