அங்கன்வாடி மையத்தில் தாசில்தார் ஆய்வு

நாட்டறம்பள்ளி அருகே அங்கன்வாடி மையத்தில் தாசில்தார் பூங்கொடி ஆய்வு செய்தார்.

Update: 2021-12-18 18:29 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் பச்சூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 

முகாமை நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்து உணவுகளை சாப்பிட்டு அங்கன்வாடி பணியாளர்களை பாராட்டினார். 

தொடர்ந்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் முறை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், கிராம உதவியாளர் பூங்கொடி, அங்கன்வாடி பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்