ஈச்சங்கால் கிராமம் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சியாக தேர்வு

ஈச்சங்கால் கிராமம் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.

Update: 2021-12-18 18:22 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் தாலுகாவுக்கு உட்பட்ட ஈச்சங்கால் ஊராட்சியில் மொத்தம் உள்ள 188 குடும்பங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 791 பேர் உள்ளனர். 

அதில் 18 வயதுக்கு மேற்பட்ட 538 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சியாக ஈச்சங்கால் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

அதில் 2-வது தவணை தடுப்பூசி 181 பேருக்கு போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கொரோனா தடுப்பூசி போடுவதில் 100 சதவீத இலக்கை எட்ட உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் ரா.ஏழுமலைக்கு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் சுகாதாரத் துறை சார்ப்பில் வாழ்த்து தெரிவித்தார். 

மேலும் அவருடன் இணைந்து பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்