150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மயிலாடுதுறையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் பாலு நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-12-18 17:09 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் பாலு நடவடிக்கை எடுத்தார்.
கடைகளில் ஆய்வு
மயிலாடுதுறை நகரில் கடந்த 2 நாட்களாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று நகராட்சி ஆணையர் பாலு தலைமையில் நகர் நல அலுவலர் டாக்டர் மலர்மன்னன் மற்றும் சுகாதார அலுவலர்கள் வண்டிக்காரத்தெருவில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆய்வில் 10-கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டறிந்த சுகாதார பணியாளர்கள், 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.11 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் மக்காத குப்பை மேலாண்மை செய்யப்படும் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன், டேவிட்பாஸ்கர் மற்றும் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்