நாமக்கல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Update: 2021-12-18 16:53 GMT
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக இறந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முரளி கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்