நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 61,753 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 61,753 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 14 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 43 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 15-ம் கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 505 முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 61 ஆயிரத்து 753 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.