ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

Update: 2021-12-18 16:13 GMT
திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருகே உள்ள பைங்காநாடு கிராமம் பிடாரி குளம் அருகே வயல்வெளியில் சிறுவன் ஒருவன் ஆடு மேய்ப்பதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கலெக்டர் அழகர்சாமி உத்தரவின்பேரில் சைல்டு லைன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், பைங்காநாடு கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அங்கு சென்று விசாரித்தனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயதான சிறுவன் ஆடு மேய்த்ததும், அவனை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது51) என்பவர் கொத்தடிமையாக வேலைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்