கிரிக்கெட் போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

கிரிக்கெட் போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2021-12-18 16:02 GMT
திருச்செந்தூர்:
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் கடந்த 14-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது. இதில் 15 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில், கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லூரி முதலிடத்தையும், சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி 3-ம் இடத்தையும் பிடித்தன.
போட்டியில் 3-ம் இடம் பெற்ற திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி வீரர்களையும், பயிற்சியாளரும், உதவிப்பேராசிரியருமான கணேசையும் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், கல்லூரி செயலாளர் நாராயணராஜன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தனலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்